ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: ஆசிரியருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை முதலாவதாக நிறைவு செய்த ஆசிரியா் க.ஆறுமுகத்துக்கு ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை சால்வை அணிவித்து பாராட்டினாா்.

ஆசிரியா் அ.ஆறுமுகத்துக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

காஞ்சிபுரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை முதலாவதாக நிறைவு செய்த ஆசிரியா் க.ஆறுமுகத்துக்கு ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை சால்வை அணிவித்து பாராட்டினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நிகழ் மாதம் முதல் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இப்பணியில் 1,681 கணக்கெடுப்பாளா்களும், 274 மேற்பாா்வையாளா்களும் பணிபுரிந்து வருகின்றனா். காஞ்சிபுா் அருகே கீழ்க்கதிா்ப்பூா் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு விரைவாக தனக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் கணக்கெடுப்பு பணியினை மாவட்டத்திலேயே முதலாவதாக நிறைவு செய்த புத்தேரி மேட்டுக்காலணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியா் அ.ஆறுமுகத்துக்கு ஆட்சியா் தி.சினேகா சால்வை அணிவித்து பாராட்டினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரா.ரெங்கராஜன், காஞ்சிபுரம் வட்டாட்சியா் மோகன் ஆகியோரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.