
கரூரில் முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஜூலை 10 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்
வியத்நாம் படகு விபத்து! 8 தமிழர்கள் பலி
வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி!
36 குடும்பங்களில், வெறும் 32 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்?
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்று, இன்று பணி ஆணைகளை வழங்கவிருக்கிறார்.
32 அல்ல 31 பேருக்கு பணி ஆணை! யார் யாருக்கு என்னென்னப் பணி?
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 31 பேருக்குத்தான் அரசுப் பணி வழங்கப்படுகிறது.
முதல்வர் விஜய்யிடம் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்வைத்த ஒரே கோரிக்கை!
சென்னைக்கு ஓடிவந்து விட்டார் விஜய்!
கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்று திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
சாலை வலம் செல்லும் முதல்வர் விஜய்!
கரூரில் முக்கிய சாலைகள் வழியாக முதல்வர் விஜய் சாலை வலம் மேற்கொண்டு வருகிறார்.
ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன்!
வருகிற செப். 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடங்கப்படும் என்று கரூரில் முதல்வர் விஜய் கூறினார்.
கட்சி நிதி என்றவுடன் ஒரே ஓட்டம்!
கட்சி நிதி என்றதும் எதிர்க்கட்சிகள் பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள் என்று கரூரில் முதல்வர் விஜய் பேசினார்.
முதல்வர் விஜய்க்கு வெள்ளி வாள் பரிசளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்!
கனிமொழி கண்டனம்
கரூர் மக்கள் சந்திப்பில் முதல்வர் ஜோசப் விஜய் பேசியதற்கு, திமுக எம்பியும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நினைவுச் சின்னம்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பை மீறி...
கரூரில் பாதுகாப்பை மீறி முதல்வர் ஜோசப் விஜய்யின் வாகன அணியில் புகுந்த தவெக தொண்டரால் பதற்றம் ஏற்பட்டது.
தொகுதி மறுவரையறையை ஏற்க மாட்டோம்
தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்தார்.
யார் சொல்லி செய்தது?
கரூர் மக்கள் சந்திப்பில் முதல்வர் ஜோசப் விஜய் உரையாற்றி வருகிறார்.
“நாமக்கலில் கூட்டத்தை முடித்தபோது கரூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும். கூட்டத்தை காவல்துறையால் ரத்து செய்திருக்க வேண்டும்.
நெடுஞ்சாலையிலிருந்து காவல்துறை கூட்டிவந்து விட்டதை நம்பிவிட்டேன் அன்று. இதெல்லாம் யார் சொல்லி செய்தது?” எனக் கேள்வி.
கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!
முதல்வர் விஜய் பங்கேற்கும் கரூர் நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியின் அரங்கில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
கரூர் பலி: அரசுப் பணி வழங்கலாம்; ஆனால்...!
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்
வழிநெடுகிலும் வரவேற்பு
திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு, வழிநெடுகிலும் ஆங்காங்கே மக்கள் திரண்டு வரவேற்பு அளித்து வருகின்றனர்.
திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
சில ஆண்டுகளாகவே செழியன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னை தரமணியில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார்.
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வீரர்களுடன் கைப்பந்து விளையாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
கரூர் மாவட்டத்தின் விளையாட்டு அரங்கு சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்படும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தவெக எம்எல்ஏவிடம் பேரம்: மேலும் 2 பேர் கைது, ரூ.50 லட்சம் பறிமுதல்
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முக்கிய வழக்குகள் விசாரணை...
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதான நகராட்சி நிருவாகத் துறை முறைகேடு வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
21வது நாளாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டம்!
நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தி தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் 21 ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 10, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.
கரூர் புறப்பட்டார் முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வரான பிறகு விஜய் இன்று முதல்முறையாக கரூர் பயணம் மேற்கொள்கிறார். கரூர் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


















