ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!

கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

Vijay | Kanimozhi

முதல்வர் விஜய் | திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 2:29 pm IST

கரூர் மக்கள் சந்திப்பில் முதல்வர் ஜோசப் விஜய் பேசியதற்கு, திமுக எம்பியும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக அம்மாவட்டத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பழியை என்மீது போட்டு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்ததாகவும், காவல்துறையினர் யாருடையே பேச்சையோ கேட்டு செயல்பட்டதாகவும் முதல்வர் விஜய் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கட்சி நிதி என்று பேசியவுடன் திமுகவினர் ஓடிவிட்டனர் என்றும் முதல்வர் விஜய் விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக தூத்துக்குடியில் கனிமொழியிடம் செய்தியாளர்கள் எழுப்பி கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசியதாவது:

”கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் முதல்வர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நான் பொறுப்புடன் நடந்து கொள்ள விரும்புவதால் அதைப் பற்றி பேச விரும்பவில்லை.

ஆனால், கரூரில் களத்தில் நின்று உதவியது யார்? மக்களைத் தவிக்கவிட்டு ஓடியாது யார்? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்” எனத் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எங்கெல்லாம் ஆய்வு செய்யக் கூடாதோ, அங்கெல்லாம் ஆய்வு செய்கிறார்கள். பள்ளிகளில் குழந்தைகளின் மனதை புண்படுத்தும்படி நடந்துகொள்கிறார்கள். இந்த ஆட்சி எதை நோக்கிப் பயணிக்கிறது எனத் தெரியவில்லை என்றார்.

Summary

Who helped and who ran away in Karur? Kanimozhi condemns CM Vijay's remarks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.