ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருச்சியில் இருந்து கரூர் புறப்பட்டார் முதல்வர் ஜோசப் விஜய்

திருச்சியில் இருந்து முதல்வர் ஜோசப் விஜய் கரூர் புறப்பட்டது தொடர்பாக...

Chief Minister Joseph Vijay set out for Karur from Trichy

கரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக கரூர் செல்லும் வழியில், முதல்வர் விஜய்க்கு பெருந்திரளான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். - டிஎன்எஸ்

Published On :10 ஜூலை 2026, 12:10 pm IST

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த முதல்வர் விஜய், சாலை வழியாக கரூர் புறப்பட்டார். சற்று முன் திருச்சி அண்ணா சிலையை கடந்தார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர், திருச்சியில் இருந்து கரூருக்கு சாலை வழியாக காரில் புறப்பட்டார். சற்று முன் திருச்சி அண்ணா சிலையை கடந்தார். காலை 11 மணியளவில் கரூா் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் 5,000 போ் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறாா்.

கடந்தாண்டு செப்.27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரம் சொகுசு விடுதிக்கு அழைத்து மன்னிப்பு கேட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இறந்த குடும்பங்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற வேண்டும் என்று தெரிவித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை கரூரில் நடைபெறும் நிகழ்வில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் 32 பேருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை வழங்கி பேசுகிறாா்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய், சாலை மார்க்கமாக திருச்சியில் இருந்து கரூர் புறப்பட்டார்.

தொடர்ந்து திருச்சி அண்ணா சிலை பகுதியை கடந்த முதல்வர், சாலைகளில் நின்றிருந்த மக்களை பார்த்து கையசைத்தாவறு சென்றார்.

விஜய் வருகையொட்டி விமான நிலையம் மற்றும் திருச்சி மாவட்டம் முழுவதும் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Summary

Chief Minister Joseph Vijay set out for Karur from Trichy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.