ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! வெளியேற்றப்படும் செய்தியாளர்கள்!

கரூர் நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பற்றி...

Media denied access to the Karur event; Journalists being removed

கரூர் செல்லும் முதல்வர் - X

Published On :10 ஜூலை 2026, 11:01 am IST

முதல்வர் விஜய் பங்கேற்கும் கரூர் நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியின் அரங்கில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

முதல்வரான பிறகு விஜய் இன்று முதல்முறையாக கரூர் செல்கிறார். கடந்த ஆண்டு கரூர் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார்.

இதற்காக கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்த முதல்வர் ஜோசப் விஜய், சாலை வழியாக கரூர் செல்கிறார்.

கரூா் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் 5,000 போ் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறாா்.

இந்த நிகழ்ச்சியில் ஊடகங்கங்களுக்கு அனுமதி இன்று மறுக்கப்பட்டிருக்கிறது. கரூர் ஆட்சியர் சார்பில் செய்தியாளர்களுக்கு தனி பாஸ் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கரூர் நிகழ்ச்சி அரங்கில் இருந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் நேரடியாக அங்கு வந்து ஊடகவியலாளர்களை வெளியேற அறிவுறுத்தி வருகிறார்.

Summary

Media denied access to the Karur event; Journalists being removed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.