ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னைக்கு ஓடிவந்து விட்டார் விஜய்! 60 பேரைக் காப்பாற்றியது திமுக அரசு!

கரூர் சம்பவத்தில் முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு திமுக பதில்...

DMK responds to Chief Minister Vijay allegation regarding the Karur incident

கரூர் பிரசாரத்தில் விஜய் | டி.கே.எஸ். இளங்கோவன் - கோப்புப்படம்

Published On :10 ஜூலை 2026, 3:50 pm IST

கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்று திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் இன்று கரூர் வந்துள்ள முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசும்போது முந்தைய திமுக அரசுதான் கரூர் சம்பவத்துக்குக் காரணம் என்று கூறினார். திமுக மற்றும் காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன்,

"கரூரில் 12 மணிக்கு நிகழ்ச்சி என்று சொன்னார்கள். இதனால் மக்கள் 9 மணி முதலே அங்கு கூடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் விஜய் அங்கு இரவு 7.30 மணிக்கு வந்தார். 10 மணி நேரத்திற்கும் மேலாக குடிப்பதற்கு தண்ணீர், உணவின்றி இன்றி வெய்யிலில் இருந்ததால், மயக்கமடைந்துதான் விழுந்தார்கள். அதுவும் பல பகுதிகளில் மயங்கி விழுந்தார்கள். வெயில், தாகத்தால் 100 -க்கும் அதிகமானோர் மயங்கினர்.

10 மணி நேரம் மக்களை கூட்ட நெரிசலில் நிற்க வைத்தால் என்ன ஆகும் என்பது அறைகுறை அறிவுள்ளவர்களுக்குக்கூட தெரியும்.

காவல்துறையால் வெளியிலிருந்துதான் பாதுகாப்பு வழங்க முடியும். கூட்டத்திற்குள் இருந்தவர்களுக்கு அருகில் இருந்தவர்கள்தான் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். நெரிசலில் பாதிக்கப்பட்டோர் மருத்துவமணையில் சேர்க்கப்பட்ட நிலையில் 60 பேரை திமுக அரசு காப்பாற்றியது. முதல்வர் அவசரமாக கரூர் வந்தார்.

ஆனால் அந்த கூட்டத்துக்கு வந்தவர் சென்னைக்கு ஓடிவந்து விட்டார். பழியை இப்போது திமுக மீது சுமத்துகிறார்கள். விஜய்யை கரூருக்கு செல்ல யாரும் தடை விதிக்கவில்லை. வழக்கில் நாங்கள் அப்படி சொல்லியிருக்கிறோமா? 41 பேரை நாங்கள் கொலை செய்ததாக அமைச்சர் ஒருவர் கூறியதற்கு எதிராகவே வழக்கு தொடர்ந்துள்ளோம். விஜய்யை கரூருக்கு அனுமதிக்க கூடாது என்று ஒரு வரிகூட மனுவில் இல்லை.

என்னதான் வழிநெடுக கூட்டம் இருந்தாலும் நாமக்கல்லில் இருந்து கரூர் வர 7.30 மணி நேரம் ஆனது என்று விஜய் சொன்னதே பொய். கரூர் விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்கிறார். அந்த மக்களை வெய்யிலில் 10 மணி நேரம் நிற்கவைத்து உணவு, தண்ணீர் இல்லாமல் அவர்களை மயக்கமடையச் செய்து இறந்தார்கள் என்பதுதான் காரணம்.

கரூர் உயிரிழப்பு சம்பவம் நடந்த அன்று சென்னைக்கு ஓடிவந்த விஜய், இன்றுதான் கரூர் செல்கிறார். மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைக்கூட பார்க்கவில்லை. ஆனால், இன்று நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெகவினர் எந்த உதவியும் செய்யவில்லை.

மக்களுக்கு என்ன ஆனது என்பது குறித்துகூட தவெக நிர்வாகிகள் கவலைப்படவில்லை. இதனையெல்லாம் திசைதிருப்பும் வேலையைத்தான் விஜய் செய்து வருகிறார்" என்று பேசினார்.

Summary

DMK responds to Chief Minister Vijay allegation regarding the Karur incident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.