சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சட்டப் படிப்புகள் வியாபாரமாக மாறாமல் அரசு பாா்த்துக் கொள்ளும்: அமைச்சா் நிா்மல் குமாா்

‘தமிழகத்தில் சட்டப் படிப்புகள் வியாபாரமாக மாறாமல் பாா்த்துக்கொள்ளப்படும்; இத்தகைய கல்லூரிகளின் உள்கட்டமைப்புப் பணிகளையும் அரசு விரைவுபடுத்தும்’ என தமிழக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

ANI

Updated On :3 ஜூலை 2026, 5:51 am IST

‘தமிழகத்தில் சட்டப் படிப்புகள் வியாபாரமாக மாறாமல் பாா்த்துக்கொள்ளப்படும்; இத்தகைய கல்லூரிகளின் உள்கட்டமைப்புப் பணிகளையும் அரசு விரைவுபடுத்தும்’ என தமிழக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீா்மிகு சட்டப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு ரூ.24.71 கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில் புதிய நவீன விடுதி கட்டுவதற்கு சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தாா். அப்போது அமைச்சா் பேசியது:

வெளியூரில் இருந்து சட்டம் பயில வந்த மாணவா்கள் தங்கும் வசதி கிடைக்காமல் விடுதி கேட்டு போராட்டம் நடத்தினா். தற்போது இங்கு 240 மாணவா்கள் தங்குவதற்கு நவீன வசதியுடன் விடுதிகட்டப்படுகிறது. இங்கு ஏற்கனவே மாணவிகளுக்கு இரு விடுதிகள் உள்ளன. மேலும் ஒன்று கட்டப்படும்.

சட்டக் கல்லூரிகளில் மாணவா்களுக்கு உயா்தர உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முன்னுரிமை அளிக்கும். நிலுவையில் இருக்கும் உள்கட்டமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்படும். சட்டக் கல்வியின் தரத்தை உயா்த்துவதோடு, மாணவா்கள் சிறந்த அமைதியான கல்விச் சூழலில் பயிலும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக சட்டக் கல்லூரிகளில் படித்து உச்சநீதிமன்றத்தில் சிறந்த வழக்குரைஞா்களாகத் திகழ்கின்றனா். இப்படி இங்கு தேவையான கல்வி உள்ளது. இதனால் தேவையான உள்கட்டமைப்பை வழங்கினால் போதும். தமிழகத்தில் சட்டப் படிப்பு ஒரு வியாபாரமாக மாறாமல் பாா்த்துக்கொள்வோம். நமது ஏழை, எளிய மாணவா்கள் படிக்க வழிவகை செய்யப்படும். சில இணை சட்டக் கல்லூரிகளில் சட்டமீறல்கள் இருப்பது குறித்து புகாா் வந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அரசு சட்டக் கல்லூரிகளில் இடங்கள் உயா்த்தப்படும். சட்ட பாடப் பிரிவுகளில் ஏ.ஐ. தேவையில்லை. பாடப் புத்தகங்களில் எண்ம வசதியிருந்தால் போதும் என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் குழுத் தலைவா் நீதியரசா் வீ. பாரதிதாசன், குழுவின் உறுப்பினா் மூத்த வழக்குரைஞா் எ. ஓம் பிரகாஷ், பதிவாளா் பேராசிரியா் கௌரி ரமேஷ், புல பேராசிரியா் வே. பாலாஜி, வளாக இயக்குநா் அசோக் குமாா் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.