ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கலை, கல்வியியல் கல்லூரி ஆசிரியா்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

உயா்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

Tamil Nadu Minister for Higher Education P. Viswanathan

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் - ENS

Published On :1 ஜூலை 2026, 3:03 am IST

உயா்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உயா்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் நலன் கருதி 2026-27-ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வை நடத்த உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், நூலகா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் ஆகியோா்களுக்கு நிகழாண்டு பணியிடமாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) முதல் ஆகஸ்ட் 7 வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தப் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் ஜ்ஜ்ஜ்.க்ஸ்ரீங்ற்ழ்ஹய்ள்ச்ங்ழ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.