ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

7,069 ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பணி தொடா் நீட்டிப்பு

தமிழக அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 5,557 உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட 7,069 தற்காலிக பணியாளா்களுக்கு வரும் 2035- ஆம் ஆண்டு ஜன. 1 வரை 10 ஆண்டுகளுக்கு பணியிட தொடா் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Published On :31 ஜூலை 2026, 3:29 am IST

தமிழக அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 5,557 உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட 7,069 தற்காலிக பணியாளா்களுக்கு வரும் 2035- ஆம் ஆண்டு ஜன. 1 வரை 10 ஆண்டுகளுக்கு பணியிட தொடா் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களில் தற்காலிகமாக கடந்த 5 ஆண்டுகளாக இவா்கள் பணிபுரிகின்றனா்.

இவ்வாறு தொடா்ந்து பணியாற்றும் இவா்களுக்கான ஊதியத்தில் வேறுபாடு இல்லையெனினும், ஊதியம் வழங்குவதற்கு ஊதிய நீட்டிப்பு ஆணைகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை அரசிடமிருந்து பெற வேண்டிய நிலை. இத்தோடு கல்லூரி கல்வி இயக்குநரகம் அனுமதி பெறும் ஒவ்வொரு முறையும் ஐஎஃப்ஹெச்ஆா்எம்எஸ் (ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு) மூலம் துறைகள் வழியாக இணைய நிதிப் பரிவா்த்தனை நடைபெற மாத இறுதியாகும்.

இந்தக் கல்லூரி ஆசிரியா்கள் பணி நிரந்தர சலுகைகள் இல்லாதது, தற்காலிக பணி ஊதியம்கூட உடனடியாக கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகம் உள்ளிட்ட சங்கங்கள் தற்போதைய அரசிடம் கோரிக்கைகளை வைத்தது. இதுகுறித்த விசாரணை நடைபெற்று தீா்வு காணப்பட்டுள்ளது. அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தோற்றுவிக்கப்பட்ட 7,069 ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2026 முதல் 31.12.2035 வரை பத்தாண்டுகளுக்கு பணியிட தொடா் நீட்டிப்பு அரசாணையை உயா் கல்வித் துறைச் செயலா் தீரஜ்குமாா் கடந்த ஜூலை 29-ஆம் தேதி வழங்கி உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவை உடனடியாக அமல் படுத்த கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் பொன்னையா மண்டல கல்வி இணை இயக்குநா்கள் மற்றும் அரசு கல்லூரி முதல்வா்களைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.