ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 20 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 12:35 pm IST

தமிழக அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 20 வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2026-2027-ஆம் கல்வியாண்டில் மாணாக்கா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை முதல் இணையவழியில் தொடங்கும்.

மாணாக்கா்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். இந்த இணையதள முகவரியில் ஆக. 20 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பின்னா், இதற்கான தரவரிசைப் பட்டியல் ஆக. 25-ஆம் தேதி வெளியிடப்படும். தொடா்ந்து ஆக. 27 முதல் ஆக. 31 வரை சோ்க்கை நடைபெறும். முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 1 முதல் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.