ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தங்கம் விலை அதிரடி உயர்வு! வெள்ளி? (ஜூலை 2)

ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை அதிரடியாக பவுனுக்கு 1,200 உயா்ந்துள்ளது குறித்து...

Gold, silver decline up to 3 pc amid Fed rate hike concerns

தங்கம் விலை - ANI

Published On :15 ஜூலை 2026, 10:27 am IST

சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை அதிரடியாக பவுனுக்கு 1,200 உயா்ந்துள்ளது. அதன்படி பவுன் ரூ.1,07,200-க்கு விற்பனையாகிறது.

மேற்கு ஆசிய போா்பதற்றம் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், கச்சா எண்ணெயின் விலை படிப்படியாக குறைந்து இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.

இதற்கிடையே, இந்திய ரூபாய்க்கு நிகராண டாலரின் மதிப்பு 95.1 -ஆக உயா்ந்துள்ளது. மேலும், சா்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடும் சற்று குறைந்துள்ளது.

இதுபோன்ற சா்வதேச காரணங்களால் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

புதன்கிழமை(ஜூலை 1) காலை விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,100-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,04,800-க்கும் விற்பனையானது. அதையடுத்து மாலை வா்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு அதிரடியாக உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.150 உயா்ந்து ரூ.13,250-க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயா்ந்து ரூ.1,06,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை(ஜூலை 2) காலை விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,400-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,07,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை உயர்வு

அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5000 உயர்ந்து ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold prices surge! What about silver?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.