ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம்! செந்தில் பாலாஜியை தேடும் தனிப்படை போலீஸ்?

குதிரை பேரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவல்துறையினர் தேடுவதாக வெளியான தகவல் பற்றி...

senthil balaji

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Published On :2 ஜூலை 2026, 10:33 am IST

திமுகவுக்கு மாறும்படி தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும், திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிடம் சிலர் பேரம் பேசியுள்ளனர்.

இதுதொடர்பாக தவெக எம்எல்ஏ என். இளையராஜா, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜை சில நாள்களுக்கு முன்பு சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், சென்னையைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு, தியாகராஜன், திருச்சியைச் சோ்ந்த நரேஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கரூா் கோதை நகரைச் சோ்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலரும், கரூா் சக்தி மெஸ் உரிமையாளருமான காா்த்தி மற்றும் நிதிநிறுவன அதிபா் அதிபன் ரமேஷ் ஆகியோரிடம் சென்னையில் இருந்து வந்த போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது இருவரும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தொடா்ந்து இருவரது வீட்டிலும் போலீஸாா் சோதனை நடத்தியபோது, அதிபன்ரமேஷ் வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனா்.

இதில், காா்த்தி மற்றும் அதிபன் ரமேஷ் இருவரும் முன்னாள் திமுக அமைச்சா் செந்தில்பாலாஜியின் நண்பா்களாவா்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் தனிப்படைக் காவல்துறையினர் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கரூரில் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சென்னையைச் சேர்ந்த தனிப்படைக் காவல்துறையினர் வியாழக்கிழமை அதிகாலை அவரை தேடி சோதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

horse trading with TVK MLAs - Special police team searching for Senthil Balaji

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.