தமிழ்நாட்டில், நலிவடைந்து இருந்த மின் துறையை காப்பாற்றியவர் மு.க. ஸ்டாலின், மின் துறையில் இருந்த வருவாய் பற்றாக்குறையை குறைத்தது திமுக அரசுதான் என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் வாரியத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று காலை வெளியிட்டார்.
அதில் திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்தார்.
செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்ற போது இருந்த வருவாய் பற்றாக்குறையை ரூ.34,000 கோடியாகக் குறைந்ததுள்ளோம்.
திமுக ஆட்சிக்கு வந்த போது ஏற்கனவே வாங்கியிருந்த கட்ன் தொகைக்கு எவ்வளவு வட்டி கட்டியிருக்கிறோம் என்பதை சொல்லியிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.
மின் துறையில் அதிமுக அரசு ஏற்கனவே வாங்கிய கடனுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரு.75 ஆயிரம் கோடி வட்டி கட்டியிருக்கிறோம்.
திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்து வந்துள்ளது. நலிவடைந்த மின் துறையை காப்பாற்றியவர் ஸ்டாலின். சீரான மின் விநியோகத்துக்கு வித்திட்டவர் மு.க .ஸ்டாலின்.
5 ஆண்டுகளில் மின் துறை வருவாய் ரூ.177 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடன்களை அடைத்து வட்டியில் மட்டும் ரூ.1200 கோடி மிச்சம் பிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மின் தேவை 5 ஆண்டுகளில் 25 மில்லியன் யூனிட் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. இது வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
தேவை அதிகரிக்கப்பட்டதற்கு ஏற்ப உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும், கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதனை கொள்முதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கும். அந்த செலவினங்களை வெள்ளை அறிக்கையில் வெளியட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது. மின் துறையில் வருவாய் அதிகரித்த போதிலும் செலவினங்களும் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிப்பதால், கொள்முதல் செலவினங்கள் அதிகரித்திருக்கின்றன. வெறும் கட்டண உயர்வால் மட்டுமல்ல, சீர்திருத்தங்கள் வாயிலாக வருவாய் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
Summary
Senthil Balaji has stated that the DMK government reduced the revenue deficit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

பாஜக - திமுக இணக்கம்? செந்தில்பாலாஜி மீது நடவடிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்?

மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu




