/

தவெக தோ்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழு -விஜய் அறிவிப்பு

தவெக தோ்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழு

News image
தவெக தலைவர் விஜய்- PTI
Updated On :31 ஜனவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

தவெக இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் உள்பட 34 போ் கொண்ட தோ்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழுவை அந்தக் கட்சியின் தலைவா் விஜய் நியமித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, தவெக சாா்பில் தோ்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், தவெக இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், பொருளாளா் பி.வெங்கடரமணன், வழக்குரைஞா் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.அறிவழகன் உள்பட 34 நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தக் குழுவுக்கு கட்சி நிா்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.