பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்ஷய் கமல்!
பாரிஜாதம் தொடரில் நடிகர் ரக்ஷித்துக்கு பதிலாக நடிகர் அக்ஷய் கமல் நாயகனாக நடிக்கவுள்ளார்.


பாரிஜாதம் தொடரில் நடிகர் ரக்ஷித்துக்கு பதிலாக நடிகர் அக்ஷய் கமல் நாயகனாக நடிக்கவுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ரக்ஷித் விலகிய நிலையில், தற்போது விஷால் பாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 8 மணிக்கு பாரிஜாதம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் காது கேளாத மாற்றுத்திறனாளியாக வித்தியாசமான நடிப்பை வழங்கி வருகிறார் நடிகை ஆல்யா மானசா. இவருக்கு ஜோடியாக நடிகர் ரக்ஷித் நடித்து வந்தார்.

பாரிஜாதம் தொடரில் ஆல்யா மானசா - ரக்ஷித்
இவர்களுடன் உணர்வுப்பூர்வமான கதையம்சம் கொண்ட இத்தொடரில் ஸ்வாதி, ராஜ்காந்த், லதா ராவ் ஆகியோரின் நடிப்பும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
தற்போது, பாரிஜாதம் தொடரிலிருந்து ரக்ஷித் விலகியதால், இவருக்கு பதிலாக நடிகர் அக்ஷய் கமல் நாயகனாக நடிக்கவுள்ளார். இவர் ஆல்யா மானசாவின் ராஜா ராணி தொடரில் நடித்திருந்தார்.
தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆல்யா மானாவுடன் பாரிஜாதம் தொடரில் நடிக்கிறார். இதனால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. புதிய வாய்ப்புக்காக ரசிகர்கள் பலர் அக்ஷய் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...