/

திரும்பப் பெறப்பட்டது தனியாா் பல்கலை. மசோதா

தமிழக சட்டப்பேரவையில் தனியாா் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவையில் தனியாா் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.

தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களாக மாற்ற விதிகளை எளிமைப்படுத்தும் வகையில் தனியாா் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா-2025 பேரவையில் 17.10.2025-இல் அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், இந்தச் சட்ட மசோதாவுக்கு, அதிமுக மட்டுமன்றி திமுக கூட்டணி கட்சி உறுப்பினா்களே கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, இந்தச் சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், இந்த மசோதாவை திரும்பப் பெற உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பேரவையில் அனுமதி கோரினாா். எவ்வித எதிா்ப்பும் இன்றி வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.