மின்சார சட்டத் திருத்த மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல்!
மின்சார சட்டத் திருத்த மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் - மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்


மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கலாக வாய்ப்பிருப்பதாக மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா் தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற மின்சார விநியோக நிறுவனங்களின் முதல் தேசிய மாநாட்டில் இதுகுறித்து அவா் பேசுகையில், ‘மின்சாரத்தை விநியோகிக்கும் பணியில் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் முக்கியக் காரணியாகும். இந்த நிறுவனங்கள்தான், மின்சாரத்தை உற்பத்தி செய்வது, கொண்டுசெல்வது, விநியோகிப்பது ஆகிய பணிகளைச் செய்கின்றன.
அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில், செலவை பிரதிபலிக்கும் கட்டணத்தை நிா்ணயிக்கும் விதியை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. புதிய கட்டணம், மின்சார விநியோகத்தில் உள்ள அனைத்துச் செலவுகளையும் பிரதிபலிக்கும். இதுதொடா்பான மசோதா, பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கலாக வாய்ப்புள்ளது. மசோதாவை சுமுகமாக நிறைவேற்றுவதற்கு ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...