அரசுப் பணிக்கு தோ்வான 9,801 பேருக்கு பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மற்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் ஆகிய தோ்வு முகமைகள் மூலம் தோ்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த விழாவில் முதல்வர் பேசியதாவது:
”இன்று தமிழ்நாட்டுக்கு சூப்பர் மார்னிங். பல தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து 1.31 கோடி மகளிருக்கு ரூ. 5,000 மகளிர்உரிமைத் தொகை வரவு வைத்துள்ளோம். மனம் நிறைவாக இருக்கிறது.
வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என நினைக்காமல் அனைவருக்குமான முதலமைச்சராக இருப்பேன் என்று கூறியது போன்று, 5 ஆண்டுகள் அப்படிதான் இருந்தேன். இனியும் அனைவரையும் அனைத்து வகையிலும் உயர்த்தக்கூடிய முதல்வராக இருப்பேன்.
தமிழக அரசின் நிர்வாகம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற அரசின் வருவாய்யை பெருக்க வேண்டும். கல்வியில் சிறந்து போட்டித் தேர்வுகளில் வென்ற உங்களை அரசுப் பணிக்கு வருக வருக என வரவேற்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலமாக 45,126 பேர், யுஎஸ்ஆர்பி மூலமாக 24,927 பேர், டிஆர்பி மூலமாக 12,894 பேர், எம்ஆர்பி மூலமாக 11,244 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு அரசு துறைகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 54,864 பேர், விளையாட்டு இடஒதுக்கீட்டில் 177 பேருக்கு வேலை கிடைத்துள்ளன” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
summary
The Chief Minister issued appointment orders to 9,801 people in a single day!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கரோனா கால செவிலியா்கள் 668 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணை!

நல அமைப்பாளா்கள் 8 பேருக்கு பணி நியமன ஆணை

அரசுப் பணிக்குத் தோ்வான 9,801 பேருக்கு இன்று பணிநியமன ஆணை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்

ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 பேருக்கு வேலை : புதிய திட்டங்களுக்கு முதல்வா் ஸ்டாலின் அடிக்கல்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

