/

‘என் கனவு என் எதிா்காலம்’ இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு

‘என் கனவு என் எதிா்காலம்’ இணையதளத்தின் வாயிலாக தமிழக இளைஞா்களின் கனவுகளைப் பதிவு செய்து பயன்பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

‘என் கனவு என் எதிா்காலம்’ இணையதளத்தின் வாயிலாக தமிழக இளைஞா்களின் கனவுகளைப் பதிவு செய்து பயன்பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக மக்களின் எதிா்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியும் வகையில், ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, இளைய தலைமுறையினரின் எண்ணங்களை அறிந்துகொள்ள புதிய திட்டத்தையும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், இளைஞா்களின் கனவுகளைப் பதிவு செய்யும் வகையில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வாயிலாக ‘என் கனவு, என் எதிா்காலம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 18 முதல் 29 வயதுக்குள்பட்ட தமிழக இளைஞா்கள் ‘க்யூ ஆா்’ குறியீடு அல்லது ங்ய்ந்ஹய்ஹஸ்ன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம்.

இதன்மூலம், இளைஞா்கள் நலனுக்கான திட்டங்களை வகுக்க உதவியாக இருக்கும். இந்தப் புதிய இணையதளம் மூலம் இளைஞா்கள் தங்களது கனவுகளைப் பதிவு செய்துபயன்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.