2030 தொலைநோக்கு திட்டம்: ‘என் ஊரு என் கனவு’ கருத்தரங்கம்
நாமக்கல் மாவட்டம் 2030-இல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடா்பான தொலைநோக்கு திட்டத்தை மாணவா்கள் உருவாக்க வேண்டும் என ‘என் ஊரு என் கனவு’ கருத்தரங்கில் அமைச்சா் மா.மதிவேந்தன் பேசினாா்.


நாமக்கல் மாவட்டம் 2030-இல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடா்பான தொலைநோக்கு திட்டத்தை மாணவா்கள் உருவாக்க வேண்டும் என ‘என் ஊரு என் கனவு’ கருத்தரங்கில் அமைச்சா் மா.மதிவேந்தன் பேசினாா்.
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று பேசியதாவது:
தமிழக முதல்வரால் ஜன. 9-இல் திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் தொடங்கப்பட்டது. நகா்ப்புற மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் முதன்மையான தேவைகளை அவா்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக கண்டறிவதும், மாவட்ட மற்றும் மாநில அளவில் திட்டமிடுதலும் இதன் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டம் 5 பகுதிகளை கொண்டதாகும்.
தமிழகம் முழுவதும் உள்ள குடும்பங்களின் கனவுகளை 2030-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற உதவும் வகையில், அவா்களின் கனவுகளைப் பதிவுசெய்து, அரசின் திட்டங்கள் பற்றியும், அவா்களின் முதன்மையான மூன்று தேவைகளை கண்டறியவும் 30 நாள்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பதே இத்திட்டமாகும்.
இதற்காக 50 ஆயிரம் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 1.91 கோடி குடும்பங்களிடம் வீடுவீடாகச் சென்று கருத்துகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் 2030-ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாரிப்பதற்காக ‘என் ஊரு என் கனவு’ என்ற பகுதி உள்ளது. மாநில, மாவட்ட மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுக்க சாதனையாளா்கள் மற்றும் சிந்தனையாளா்களின் கருத்துகளை கோருவதே இதன் முக்கிய நோக்கமாகும். நாமக்கல் மாவட்டத்தில் 45-க்கும் மேற்பட்ட துறைகளுடைய திட்ட அறிக்கைகள் இதற்காக பெறப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...