/

தைப் பூசம்: வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு தைப்பூச விழாவையொட்டி நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலைநடைபெற்றது.

News image
மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட நெல் கோட்டைகள்.
Updated On :1 பிப்ரவரி 2026, 10:42 am

இணையதளச் செய்திப் பிரிவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு தைப்பூச விழாவையொட்டி நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த குன்னலூர் கிராமத்தில் இந்த கோயிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த இடத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டுதோறும் செய்யப்படும் முதல் அறுவடை நெல்லை கோட்டையாக கட்டி தைப்பூச நாளன்று வழங்குவது வழக்கம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்ட நெல் கோட்டைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலில் வழங்கினர்.

summary

A ceremony to present a paddy field to the Vedaranyam Vedaranyeswarar Temple on the occasion of the Thaipusam festival was held this morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.