டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது குறித்து...

News image
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - படம்: X
Updated On :1 பிப்ரவரி 2026, 5:41 am

தினமணி செய்திச் சேவை

மத்திய பட்ஜெட்டை(2026-27) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக தாக்கல் செய்தார்.

2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.

அப்போது, நிர்மலா சீதாராமனுக்கு தயிரில் சர்க்கரை கலந்த இனிப்பை ஊட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 - 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் தொழில் துறையினருக்கான சலுகைகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கான புதிய திட்ட அறிவிப்புகளும் வெளியாகும் எனவும் எதிர்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.