டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சீரிய சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Updated On :1 பிப்ரவரி 2026, 6:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

சீரிய சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சியில் பயணிக்கிறது.

சீரிய சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் மூலமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு உள்ளது.

தன்னிறைவு பெற்ற இந்தியா என் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம். இந்திய பொருளாதார வளர்ச்சி 7% அதிகரித்துள்ளது.

எளிய முறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

Presenting the Union Budget 2026–27 in the Lok Sabha, she said India will continue to take steady steps towards becoming a Viksit Bharat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.