/

குடியரசு துணைத் தலைவர் தைப்பூச வாழ்த்து

தைப்பூசத் திருநாளையொட்டி குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
- PTI
Updated On :1 பிப்ரவரி 2026, 5:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

தைப்பூசத் திருநாளையொட்டி குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும், இணை இன்றித் தான்உடையான் ஏந்திய வேல் அன்றே, பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம் மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள்வேலே" என வேல் ஏந்தி அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டி எந்நாளும் நம்மை காத்தருளும் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துகள்.

தைப்பூச நன்னாளில் முருகன் அருளால் நாட்டில் அறியாமை என்னும் இருள் நீங்கி ஞான ஒளி பரவட்டும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகட்டும், வறுமை நீங்கி வளம் பெருகட்டும், கவலைகள் தீர்ந்து மக்கள் வாழ்வெல்லாம் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகி, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருள் என்றும் துணை நிற்க்கட்டும் . இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தைப்பூச திருநாளையொட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணியில் இரவு முதலே பக்தர்கள் குவிந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.‘

summary

Vice President C.P. Radhakrishnan on Sunday extended warm Thaipusam greetings to people across the country, invoking the boundless grace of Lord Murugan to guide society on the path of righteousness, wisdom, and harmony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.