/

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்: விஜய் வாழ்த்து!

தைப்பூச விழாவையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து.

News image
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.
Updated On :1 பிப்ரவரி 2026, 4:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

தைப்பூச விழாவையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தைப்பூச திருநாளையொட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி, சுவாமி மலை, திருச்செந்தூர், பழமுதிர்சோலை உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தைப்பூச திருநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.

இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.