ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 19 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

முதல்வர் விஜய்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 10:39 pm IST

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார்.

பிகாரில் தேஜஸ்வி யாதவ் கைது செய்யப்பட்டது குறித்து ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த ஆண்டு டிசம்பருக்குள் 5 ஜி சேவையை எட்டும் இலக்கை முடிவு செய்துள்ளது.

ஐக்யூ நிறுவனத்தின் நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பல புதிய அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. ஐக்யூவில் இதுவரை இல்லாத வகையில், 9,100mAh பேட்டரி திறன் சோனி கேமரா, ஓஎல்இடி தொடுதிரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் தனிநபர் ஒருவர் தனது பெயரில் அல்லது ஒரு அடையாள ஆவணத்தின் கீழ் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

டெக்னோ நிறுவனத்தின் போவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 50MP சோனி கேமாரா, 6500mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 1.95 லட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் தனது சொந்த செலவில் வாங்கித் தரலாம் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம் கருவட்டா பகுதியைச் சர்ந்த 65 வயது தாத்தாவைக் கொலை செய்த வழக்கில், அவரது 13 வயது பேத்தி மற்றும் பேத்தியின் மூன்று நண்பர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புது தில்லி சென்ற விரைவு ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.

பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.7 ஆக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் புதன்கிழமை காலை வெளிநடப்பு செய்தனர்.

முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சம் ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் இன்று (ஆக. 19) அறிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டர் ரூ.38 லிருந்து ரூ. 41 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் விஜய் இன்று (ஆக. 19) அறிவித்தார்.

அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் வாகனம் வழங்கப்படும்; வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்: சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

வட சென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலக தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்: முதல்வர் விஜய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.