ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! காரணம்?

மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 1.95 லட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது...

1.95 lakh Instagram, Facebook, and YouTube accounts suspended in 5 months

கோப்புப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 6:56 pm IST

மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 1.95 லட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் சராசரியாக நாளொன்றுக்கு 1,275 முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 68 நொடிக்கு ஒரு முடக்க உத்தரவு மத்திய அரசுத் தரப்பில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கடந்த 5 மாதங்களில், இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கிட்டத்தட்ட 1 லட்ச முடக்க உத்தரவுகளும், முகநூலுக்கு 80 ஆயிரம் முடக்க உத்தரவுகளும் யூடியூபிற்கு 15,000 முடக்க உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு 10 முடக்க உத்தரவுகளிலும் மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமும், முகநூலும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு கணக்கை முடக்கும்போதும் அதில் உள்ள நூற்றுக்கணக்கான பதிவுகளும், உள்ளடக்கங்களும் முழுமையாக நீக்கப்படுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசு சார்ந்த நிறுவனங்களில் இருந்து, இக்கணக்குகளை நீக்கும் உத்தரவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து மாணவ சமூகம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தவறான மற்றும் பொய்யான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுக்கும் வகையில் கடந்த 5 மாத கால அளவில் அதிக எண்ணிக்கையிலான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இணையதள முடக்கத்திற்கான உத்தரவுகள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 79 (3) (b)-இன் கீழ் பிறப்பிக்கப்படுகின்றன.

பயனர்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களுக்கு இடைத்தரகர்களுக்குக் கிடைக்கும் சட்டப்பூர்வப் பாதுகாப்பைத் தக்கவைத்துக்கொள்ள, அரசு மற்றும் சட்ட அமலாக்க முகமைகளால் சட்டவிரோதமானவை எனக் கருதப்படும் பதிவுகளை நீக்குமாறு இச்சட்டப்பிரிவு கட்டாயப்படுத்துகிறது.

Summary

1.95 lakh Instagram, Facebook, and YouTube accounts suspended in 5 months

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.