ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்ஸ்டாகிராமில் 18+ ரீல்ஸ்களை நீக்குவது எப்படி?

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான ரீல்ஸ் விடியோக்களை தவிர்க்கும் வழிமுறை குறித்து...

instagram reels

இன்ஸ்டாகிராம் - கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 7:08 pm IST

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான ரீல்ஸ் விடியோக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான விடியோக்கள் மட்டும் அடிக்கடி வருகிறதா? அதனை சரி செய்துகொள்வதற்கான வழிமுறையை இன்ஸ்டாகிராம் வழங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியில் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட விடியோவை பார்த்தாலோ, லைக் செய்தாலோ அல்லது கமென்ட் செய்தாலோ தொடர்ந்து அதே மாதிரியான விடியோக்களையே பரிந்துரை செய்யும்.

பொதுவெளிகளில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும்போது பலருக்கு இது சங்கடமான சூழலையே ஏற்படுத்தும். இதனை இன்ஸ்டாகிராமில் ஒருசில வழிமுறைகளை பின்பற்றி மாற்றிக்கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புரொபைல் பகுதிக்குச் சென்றால் வலது மூலையில் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது கன்டென்ட் பிரிபெரென்சஸ் (Content prederences) என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். வாட் யூ சி (What you see) என்ற பகுதியில் இந்த ஆப்ஷன் இருக்கும்.

இதில் சென்சிடிவ் கன்டென்ட், பொலிட்டிக்கல் கன்டென்ட் என இரு வகைகள் இருக்கும். அதற்கு கீழே ரீசெட் சஜெஸ்டட் கன்டென்ட் (Reset Suggest content) என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

இதனைச் செய்த பிறகு பரிந்துரை செய்யப்படும் விடியோக்களின் வகை படிப்படியாக மாறும். பின்னர் பயனர்கள் பார்க்கும், விரும்பும் விடியோக்களுக்கு ஏற்ப புதிய அல்காரிதம் செயல்படும்.

ஒருமுறை ரீசெட் செய்துவிட்டால் பழைய கன்டென்ட் விடியோக்கள் மீண்டும் பரிந்துரை பட்டியலில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

How to change 18+ Reels video algorithm on Instagram?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.