ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

பெரம்பூரில் ரூ. 300 கோடியில் உலகத்தர பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதைப் பற்றி...

CM Vijay

முதல்வர் விஜய். - (கோப்புப் படம்)

Published On :19 ஆகஸ்ட் 2026, 10:25 am IST

சென்னை பெரம்பூரில் ரூ. 300 கோடியில் உலகத்தர பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆக. 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், விதி எண் 110-ன்கீழ் முதல்வர் விஜய் இன்று காலை (ஆக. 19) சட்டப்பேரவையில் பேசினார்.

முதல்வர் விஜய்யின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் தொகுதியில் ரூ. 300 கோடியில் உலகத்தரத்திலான மருத்துவமனை அமைக்கப்பட்டும் என்று தெரிவித்தார்.

அவர் பேசுகையில், “ஒரு உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கக் கூடாது.

அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. மருத்துவம் என்பது சலுகை அல்ல; அது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை.

ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிகக் கொடியது. மருத்துவத்தைத் தேடி வரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்புணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசரகால வசதியின்மை போன்றவற்றை படிப்படியாக அகற்றி; ஏழை - பணக்காரர், கிராமம் – நகரம் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்வதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் சில அறிவிப்புகளைச் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் இன்று வெளியிட விரும்புகிறேன். வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்” என்றார்.

Summary

Chief Minister Vijay has announced that a world-class multi-specialty hospital will be established in Perambur, Chennai, at a cost of ₹300 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.