
9,100mAh பேட்டரி, சோனி கேமரா... அசத்தல் அம்சங்களுடன் வெளியான ஐக்யூ நியோ 11 அல்ட்ரா!
ஐக்யூவில் இதுவரை இல்லாத வகையில், 9,100mAh பேட்டரி திறன், சோனி கேமரா, ஓஎல்இடி திரை உள்ளிட்ட அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.

ஐக்யூ நியோ 11 அல்ட்ரா - படம் / நன்றி - ஐக்யூ
ஐக்யூ நிறுவனத்தின் நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பல புதிய அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது.
ஐக்யூவில் இதுவரை இல்லாத வகையில், 9,100mAh பேட்டரி திறன் சோனி கேமரா, ஓஎல்இடி தொடுதிரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.
முன்பே நினைவகம், வண்ணங்களின் வகைகள் குறித்த விவரங்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கேமரா மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பம்சங்கள்
6.83 அங்குல 2கே ஓஎல்இடி (OLED) தொடுதிரை உடையது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 2000 nits திறன் கொண்டது. அதிகபட்சமாக 4500 nits வரை பிரகாசம் இருக்கும்.
மீடியாடெக் டைமன்சிட்டி 9500M சிப்செட் உடையது. கேம் விளையாடுபவர்களுக்கு இது பொருத்தமானது.
ஆன்டிராய்டு 16 ஆரஞ்ச் ஓஎஸ் இயங்குதளம் உடையது.
9,100mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா பிரியர்களுக்காக பின்புறம் 50MP சோனி லென்ஸ் கேமராவும் 8MP அல்ட்ரா வைட் கேமராவுக் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் செல்ஃபி பிரியர்களுக்காக 16MP கேமரா உள்ளது.
தூசி மற்றும் நீர் புகாத்தன்மைக்காக IP68/IP69 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
3D அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிட்ண்ட்
225 கிராம் எடை கொண்டது.
சீனாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், இந்தியாவில் இதன் விலை ரூ. 52,550 (12GB+256GB நினைவகம்)
விலைப்பட்டியல்
12GB+256GB நினைவகம் உடைய ஐக்யூ நியோ 11 அல்ட்ரா விலை ரூ. 52,550
16GB+256GB நினைவகம் உடைய ஐக்யூ நியோ 11 அல்ட்ரா விலை ரூ. 58,200
12GB+512GB நினைவகம் உடைய ஐக்யூ நியோ 11 அல்ட்ரா விலை ரூ.61,050
16GB+512GB நினைவகம் உடைய ஐக்யூ நியோ 11 அல்ட்ரா விலை ரூ. 66,750
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







