ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 15 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

cm vijay hoist national flag in chennai: today news live aug 14

கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய். - DIPR

Published On :15 ஆகஸ்ட் 2026, 9:50 pm IST

தொகுதி மறுவரையறையால் இது மாறாது. எம்.பி.க்கள் 39-லிருந்து 59-ஆகவும், 234 எம்.எல்.ஏ.க்களிலிருந்து 351-ஆக உயரும். ஒரு எம்.பி.க்கான மக்கள்தொகை 15 லட்சமாகவும், வாக்காளர்கள் 10 லட்சமாகவும் குறையும்: பாமக தலைவர் அன்புமணி

வந்தே மாதரத்தை அவமதித்ததாக பாஜகவின் குற்றச்சட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், மல்லிகார்ஜுன கார்கே நீண்டநேரம் நின்று கொண்டிருந்ததால் அவருக்காக நாற்காலியை கொண்டு வருமாறு சோனியாவும் ராகுலும் சைகையில் கூறியதாக காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

திருவொற்றியூரில் பிளஸ் 2 மாணவா், சக மாணவா் மற்றும் நண்பா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவும் அதிமுகவும் இணைவதாகக் கூறுவது தவெகவினர் கனவாக வேண்டுமானால் இருக்கலாம். நிச்சயமாக அதற்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை: கனிமொழி எம்.பி.

தவெக அரசு ரீல்ஸ் போடுவதாய் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யார் ரீல்ஸ் போடுகின்றனர்? மக்கள்தான் ரீல்ஸ் போடுகின்றனர். மாற்றம் வர வேண்டும் என ரீல்ஸ் போட்டது, மக்கள். ஏற்றம் வர வேண்டும் என சமூக ஊடகங்களில் எழுதியதும் மக்களே: அமைச்சர் ராஜ்மோகன்

முதல்வர் விஜய் குறித்து இழிவாகப் பேசியதற்காக தமிழக மக்களிடமும் முதல்வர் விஜய்யிடமும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

இந்தியத் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கான 12 நிமிடக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் தாயாரை இழிவுபடுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை

முதல்வர் விஜய் குறித்த அநாகரிகப் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்...

முதல்முறை சட்டப்பேரவைக்குச் சென்றுள்ள எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க முதல்வர் விஜய் திட்டம் எனத் தகவல்.

முதல்வர் விஜய் குறித்து அநாகரிகமாகப் பேசியதற்கு தவெக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த சுதந்திர நாளுக்குள் முதல்வர் விஜய் பல விஷயங்களை சாதித்துக் காட்டுவார் என இயக்குநரும், முதல்வரின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் பேசினார்.

சுதந்திர நாளை முன்னிட்டு கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே மகாராஷ்டிரத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் கொடியேற்றினார்.

தில்லியில், தொடர்ந்து 2 ஆம் ஆண்டாக செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவை காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே புறக்கணித்துள்ளனர்.

சென்னையில் முதல்வர் விஜய் முதல்முறையாக கொடியேற்றிய சுதந்திர நாள் விழாவில் விஜய்யின் பெற்றோர் மற்றும் நடிகை த்ரிஷா கலந்துகொண்டனர்.

முந்தைய ஆட்சிகளில் கொண்டுவந்த பயனுள்ள திட்டங்கள் தொடரும் என்று சுதந்திர நாள் உரையில் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

நாட்டின் சுதந்திர நாளையொட்டி, நாட்டு மக்களுக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சுதந்திர நாளையொட்டி, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் முதல்வர் விஜய் முதல்முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.