ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் விஜய் குறித்து நயினார் சர்ச்சை பேச்சு: காங்கிரஸ் கண்டனம்

முதல்வர் விஜய் குறித்து பாஜக தலைவர் இழிவாகப் பேசியதற்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தது குறித்து...

Vijay | Nainar Nagenthran

முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:28 pm IST

முதல்வர் விஜய் குறித்து இழிவாகப் பேசியதற்காக தமிழக மக்களிடமும் முதல்வர் விஜய்யிடமும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியதைக் கண்டித்து, மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்வர் விஜய்யையும், அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல; தொடர் வாடிக்கையாகிவிட்டது.

பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதல்வரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைக் குறிப்பிடும் வகையில் பேரவையில் முதல்வர் விஜய், "எங்க, அப்பாவைக் காணோம்" என்று பேசியிருந்தார்.

இதனைக் குறிப்பிட்டு, இன்று சென்னையில் மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "சட்டப்பேரவையில் 'அப்பா எங்கே, அப்பா எங்கே' என்று தேடினால் எப்படி தெரியும்? வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். சட்டப்பேரவையில் அப்பாவைத் தேடினால் யாருக்கு தெரியும்?" என்று பேசியுள்ளார்.

மேலும், முதல்வர் விஜய் குறித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவான பேச்சைக் கண்டித்து, அவர் மீது வழக்குரைஞர் வர்த்தினி என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Summary

Congress Chief Manickam Tagore condemns BJP Chief Nainar Nagenthran's controversial remarks about CM Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.