ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!

முதல்வர் விஜய் குறித்து அநாகரிகமாக பேசியதாக நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்...

Chief Minister Vijay, Nainar Nagendran

முதல்வர் விஜய், நயினார் நாகேந்திரன் - தினமணி

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:15 pm IST

முதல்வர் விஜய் பற்றி அவதூறாகப் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் அநாகரிகமாகப் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தவெக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஆன்லைன் மூலம் டிஜிபியிடம் புகார் கடிதம் வழங்கியுள்ளார்.

"நயினார் நாகேந்திரன் சமீபத்தில் பொதுவெளியில்/ஊடகங்களின் முன்னிலையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயாரையும் குறிவைத்து மிகவும் இழிவான, அவதூறான மற்றும் வகையில் கருத்துக்களை மரியாதைக்குறைவான தெரிவித்துள்ளார். அதனைக் கண்டு ஒரு பெண்ணாகவும், தாயாகவும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளானேன். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Summary

Indecent remarks on CM Vijay: Complaint lodged with the DGP against Nainar Nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.