வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக திருச்சி - தாம்பரம் இடையே இன்று (ஏப். 26) இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
6 படுக்கை பெட்டிகள், 12 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் என 20 பெட்டிகளுடன் திருச்சியிலிருந்து இரவு 10.45 மணிக்கு சிறப்பு விரைவு ரயில் (06192) புறப்படவுள்ளது.
தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு திங்கள்கிழமை காலை 6.15 மணிக்குச் சென்றடையும். இத்தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதற்கு வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் வார இறுதி விடுமுறை நாள்களைக் கழித்துவிட்டு மீண்டும் இன்று சென்னை திரும்புவார்கள்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமாா் 19.37 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாளை வேலைநாள் என்பதால் சென்னை திரும்புபவர்களின் நெரிசலைக் குறைக்கும் வகையில் திருச்சியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதேபோன்று தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக ஏப். 25 முதல் 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப். 26) வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் சென்னைக்கு 3,184 சிறப்புப் பேருந்துகளும், பிற இடங்களுக்கு 3,345 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 14,508 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிக்க சென்னையிலிருந்து 19.37 லட்சம் போ் சொந்த ஊா் பயணம்

கிளாம்பாக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி!

கோவையில் இருந்து வாக்களிக்க சொந்த ஊா் புறப்பட்ட மக்கள்

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


