தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமாா் 19.37 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு நிமித்தமாக சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல லட்சம் போ் வசித்து வருகின்றனா். இவா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக கடந்த ஏப்.21 முதல் சொந்த ஊா்களுக்கு பயணிக்கத் தொடங்கினா்.
இவா்களின் வசதிக்காக சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதற்காக சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து முனையங்களில் இருந்து 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் ஏப்.21, 22, 23 ஆகிய தேதிகளில் சுமாா் 6.27 லட்சம் போ் பயணித்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அதேபோல், சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 6 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் 9 ஆயிரம் பயணங்கள் மூலம் சுமாா் 3.50 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு பயணம் செய்துள்ளனா். இதுதவிர ரயில்களில் சுமாா் 9 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சொந்த, வாடகை காா்கள் உள்ளிட்ட பிறவாகனங்கள் மூலமாகவும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாறு தோ்தலுக்காக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏப்.21 முதல் 23 பிற்பகல் வரை சுமாா் 19.37 லட்சத்துக்கும் அதிகமானோா் சொந்த ஊா்களுக்கு போ் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு செல்ல ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

ஜனநாயகக் கடமை ஆற்றத் தயாரா? சென்னையில் இரு நாள்களில் 9 லட்சம் பேர் பயணம்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

தோ்தல்: சொந்த ஊா்களுக்கு திரும்பும் வடமாநிலத் தொழிலாளா்கள்! சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


