தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலையொட்டி வாக்களிக்க சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்லுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏப்.23 ஆம் தேதி பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது.
இந்த நிலையில், தேர்தல் வாக்குப்பதிவுக்காக சொந்த ஊர் செல்வோருக்கு இடையூறு இன்றி பயணிக்க சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு விரைவு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்: 06072) நாளை (ஏப்.22) பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, ஏப். 23 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்கும் நோக்கில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் இயக்கம் - முன்பதிவு இன்று (ஏப்.21) பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாகச் சென்று நாகர்கோயிலைச் சென்றடைகிறது.
தேர்தல் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகளைக் குறைக்க ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ அல்லது ரயில்வே கவுன்டர்களிலோ முன்கூட்டியே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யுமாறும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
Summary
In view of the upcoming Assembly elections in Tamil Nadu, special trains have been announced to facilitate travel from Chennai to the southern districts for voting.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

எஸ்ஐஆருக்கு நன்றி!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


