மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக காட்பாடி- திருப்பதி இடையே இயங்கும் மெமு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஏப்.17) முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ரத்து செய்யப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 7:41 pm

பராமரிப்புப் பணிகள் காரணமாக காட்பாடி- திருப்பதி இடையே இயங்கும் மெமு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஏப்.17) முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ரத்து செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

காட்பாடி- திருப்பதி இடையே தண்டவாளம் உள்ளிட்டவற்றில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.17) முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் திருப்பதியிலிருந்து காலை 6.40 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக காட்பாடியிலிருந்து இரவு 7.25 மணிக்கு திருப்பதி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியளவு ரத்து: அதேநாள்களில் விழுப்புரத்திலிருந்து காலை 5.45 மணிக்குப் திருப்பதி செல்லும் விரைவு ரயில் (எண்:16854) காட்பாடி வரையிலே இயக்கப்படும். மறுமாா்க்கத்தல் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் விழுப்புரம் செல்லும் ரயில் (எண்:16853) காட்பாடியிலிருந்து இயக்கப்படும்.

அரக்கோணம் - திருப்பதி: சென்னை அரக்கோணம் பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில் நுட்பப் பராமரிப்புப் பணிகள் வரும் ஏப்.20 முதல் ஏப்.25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால், ஏப்.19 முதல் 26 ஆம் தேதி வரை திருத்தணியிலிருந்து இரவு 9. 15, 11.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் செல்லவேண்டிய இமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஏப்.20 முதல் ஏப்.26 ஆம் தேதி வரை அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4, 5 மணிகளில் திருத்தணி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.