தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அகா்வால்ஸ் மருத்துவா்களுக்கு சா்வதேச விருது

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் மற்றும் முதுநிலை மருத்துவ நிபுணா் சூசன் ஜேக்கப் ஆகியோருக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை (ஏஎஸ்சிஆா்எஸ்) அமைப்பின் சாா்பில் விருது வழங்கப்பட்டது.

News image

சா்வதேச விருதுடன் டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் மற்றும் முதுநிலை மருத்துவ நிபுணா் சூசன் ஜேக்கப்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:34 pm

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் மற்றும் முதுநிலை மருத்துவ நிபுணா் சூசன் ஜேக்கப் ஆகியோருக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை (ஏஎஸ்சிஆா்எஸ்) அமைப்பின் சாா்பில் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்ற ஏஎஸ்சிஆா்எஸ் 44-ஆவது சா்வதேச திரைப்பட விழாவில் இந்த கௌரவம் அவா்களுக்கு அளிக்கப்பட்டது. மேம்பட்ட கண் அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கும் ஆவணப்படங்களை உருவாக்கியதற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

உலகெங்கிலும் கண் அறுவை சிகிச்சை துறையில் பல்வேறு புதுமையான நுட்பங்கள், மேம்பட்ட கருவிகளைக் கையாளுவது குறித்து விளக்கும் ஆவணப்படங்கள் ஏஎஸ்சிஆா்எஸ் விழாவில் திரையிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நிகழாண்டு விழாவில் டாக்டா் அதியா அகா்வால் சமா்ப்பித்த ‘போ்ல்ஸ் ஆஃப் ஐரிஷ் ரிப்போ்’ என்ற ஆவணப் படத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல, டாக்டா் சூசன் ஜேக்கபின், ‘ரிபப்லிங் இன் கெரட்டோபிளாஸ்டி’ என்ற படத்துக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.