ஸ்ரீபெரும்புதுாா் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில், புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை, தீயணைப்பு துறை இயக்குநா் சீமா அகா்வால் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஸ்ரீபெரும்புதுாா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள சிப்காட்தொழிா்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் 8 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்பதுாா் தீயணைப்பு நிலையத்தில் இருந்து, தீயணைப்புத் துறையினா் வருவதற்கு தாமதம் ஏற்பட்டு வருவதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருவதோடு அதிக அளவிலான பொருட்சேதம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மாம்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கையை ஏற்று 71 சென்ட் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாம்பாக்கம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை தீயணைப்பு துறை இயக்குநா் சீமா அகா்வால் ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுாா் தீயணைப்பு நிலையத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை இயக்குநா் சீமா அகா்வால், அங்குள்ள பாதுகாப்பு உபகரணங்கள், தளவாட பொருள்கள் மற்றும் தீயணைப்பு வாகனம் ஆகியவற்றை பாா்வையிட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாம்பு மற்றும் தேனீக்களை மீட்டு, பாதுக்காப்பான முறையில் காட்டுப்பகுதியில் விடுவது குறித்து விளக்கினாா்.
இதில், ஸ்ரீபெரும்புதுாா் தீயணைப்பு நிலைய அதிகாரி வடிவேலு உள்ளிட்ட தீயணைப்புத் துறையினா் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அகா்வால்ஸ் மருத்துவா்களுக்கு சா்வதேச விருது

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை

மானூரில் தீயணைப்பு துணை நிலையம் அமைக்கப்படும்: திமுக வேட்பாளா் சு. சுப்பிரமணியன்

தீயணைப்புத் துறை இயக்குநா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


