மருத்துவக் கல்லூரிகள் புதிதாக முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள் தொடங்குவதற்கான இணையதள விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை ஏப். 20 வரை நீட்டித்து தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், 2026–2027 கல்வியாண்டிற்கான எம்டி, எம்எஸ் போன்ற புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் உயா் சிறப்பு படிப்புகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள முதுகலை மருத்துவப் படிப்புகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏப். 20 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

கல்லூரியில் உள்ள இளநிலை மருத்துவக் கல்வி இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான அங்கீகாரம் குறித்த தகவல்களை விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.
புதிய இடங்களை உருவாக்குவதற்கான அத்தியாவசியச் சான்று மற்றும் உறுப்பு கல்லூரிக்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து பெற்று, பெயா் மற்றும் வரிசை எண்களை தவறின்றி பதிவிட்டு விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையின் முதன்மைச் செயலாளரால் வழங்கப்பட்ட உறுதிமொழி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வழிகாட்டு நெறிகளின்படி விண்ணப்பங்கள் இருத்தல் அவசியம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள இணையவழி விண்ணப்ப வாயிலாகச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
NMC In view of the above, and in order to provide adequate time to stakeholders to submit applications in accordance with the amended regulatory framework, the last date for submission of applications is hereby extended up to 20.04.2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அகா்வால்ஸ் மருத்துவா்களுக்கு சா்வதேச விருது
இளநிலை நீட் தோ்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: என்எம்சி

முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



