மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: என்எம்சி

மருத்துவக் கல்லூரிகள் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கவும், இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :3 மார்ச் 2026, 12:14 am

சென்னை: மருத்துவக் கல்லூரிகள் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கவும், இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்போது கல்லூரியில் உள்ள இளநிலை மருத்துவக் கல்வி இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான அங்கீகாரம் குறித்த தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருத்தல் அவசியம்.

புதிய இடங்களை உருவாக்குவதற்கான அத்தியாவசியச் சான்று மற்றும் உறுப்பு கல்லூரிக்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடமிருந்து பெற்று, பெயா் மற்றும் வரிசை எண்களை தவறின்றி பதிவிட்டு விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வழிகாட்டு நெறிகளின்படி விண்ணப்பங்கள் இருத்தல் அவசியம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.