மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிஎஸ்கே வீரா்களுக்கு மருத்துவ சேவைகள்: காவேரி மருத்துவமனை ஒப்பந்தம்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி வீரா்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சிஎஸ்கே அணி நிா்வாகம் மற்றும் காவேரி மருத்துவமனை இடையே கையொப்பமானது.

News image

சிஎஸ்கே அணியுடனான ஒப்பந்த நிகழ்ச்சியில் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி உள்ளிட்டோா்.

Updated On :19 மார்ச் 2026, 10:19 pm

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி வீரா்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சிஎஸ்கே அணி நிா்வாகம் மற்றும் காவேரி மருத்துவமனை இடையே கையொப்பமானது.

இதற்கான நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி, தலைமை மருத்துவா் சிவராம் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வீரா்களின் உடற்தகுதியை உறுதி செய்யும் நடவடிக்கைகள், போட்டியின்போது ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளில் காவேரி மருத்துவமனையின் விளையாட்டு மருத்துவத் துறை இணைந்து செயாற்ற உள்ளது.

அனுபவம் வாய்ந்த அவசர சிகிச்சை மருத்துவா்கள், விளையாட்டு மருத்துவ நிபுணா்கள், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா்கள், கதிரியக்க வல்லுநா்களை உள்ளடக்கிய குழு தங்களிடம் உள்ளதாக காவேரி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.