தெற்கு ரயில்வே மண்டலம் தொடங்கப்பட்டு செவ்வாய்க்கிழமையுடன் (ஏப். 14) 75 ஆண்டுகளை நிறைவு செய்தது.
இது குறித்து தெற்கு ரயில்வே துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 1951- ஆம் ஆண்டு ஏப்.14- ஆம் தேதி தெற்கு ரயில்வே மண்டலம் அமைக்கப்பட்டது. அப்போதைய மதராஸ் மற்றும் தெற்கு மகாராஷ்டிரா ரயில்வே, தெற்கு இந்திய மற்றும் மைசூர் மாநில ரயில்வே என மூன்று பிரிவுகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன்பின், நிர்வாக ரீதியாக தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை மற்றும் கேரளத்தைச் சேர்ந்த பாலக்காடு, திருவனந்தபுரம் என 6 கோட்டங்கள் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளன.
சுதந்திரத்துக்குப் பிறகு 1856- ஆம் ஆண்டில் ராயபுரம் முதல் ஆற்காடு எனப்படும் வாலாஜா வரை தெற்கு ரயில்வேயின் முதல் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் நிர்வாக ரீதியிலான முன்னேற்ற மாற்றங்களாக, கடந்த 1966- ஆம் ஆண்டு தெற்கு மத்திய ரயில்வே மண்டலம் உருவானது. கடந்த 2003 -ஆம் ஆண்டு தென்மேற்கு ரயில்வே மண்டலம் ஏற்படுத்தப்பட்டது.
வளர்ச்சி: தற்போதைய தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலப் பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. சென்னையில் மிக பாரம்பரியமிக்க தெற்கு ரயில்வே அலுவலக வளாகக் கட்டடம் நூற்றாண்டைக் கடந்து, சென்னை சென்ட்ரல் அருகே அமைந்துள்ளது.
கடந்த 1856 முதல் தற்போது வந்தே பாரத் உள்ளிட்ட நவீன ரயில்களை இயக்கும் அளவுக்கு தெற்கு ரயில்வே வளர்ச்சியடைந்துள்ளது. வருங்காலத்தில் புல்லட் ரயிலும் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் இயக்கப்படும். யுனெஸ்கோ பாரம்பரிய பட் டியலில் இடம் பெற்ற நீலகிரி மலை ரயில், நாட்டின் முதல் செங்குத்தாக உயர்த்தி, இறக்கும் வகையிலான பாம்பன் ரயில் பாலம் ஆகியவை தெற்கு ரயில்வே மண்டலத்தின் முக்கிய வளர்ச்சியின் அடையாளமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!

வருவாய், தத்கல் பதிவில் தெற்கு ரயில்வே முதலிடம்

தெற்கு ரயில்வே மண்டலத்தில் பயணி, சரக்கு வருவாய் அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல்

ஒரே மாதத்தில் ரயில்வேயின் சரக்கு பிரிவு வருவாய் ரூ.14,572 கோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

