மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை சான்யா மல்ஹோத்ரா குறித்து...

News image

நடிகை சான்யா மல்ஹோத்ரா. - படங்கள்: இன்ஸ்டா / சான்யா மல்ஹோத்ரா.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:15 am

பாலிவுட்டில் பத்தாண்டுகளை நிறைவு செய்த நடிகை சான்யா மல்ஹோத்ரா பிடிஐக்கு அளித்த நேர்காணலில், “வாய்ப்புகளுக்கு நன்றியுணர்வுடன் இருக்கிறேன்” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

தில்லியைச் சேர்ந்த நடிகை சான்யா மல்ஹோத்ரா ’டேன்ஸ் இந்தியா டேன்ஸ்’ என்ற தொலைக்காட்சியில் நடனத்தின் மூலம் பிரபலமாகி பின்னர் நடிகையாக 2016ல் ஆமிர் கானின் தங்கல் படத்தில் அறிமுகமானார்.

பதாய் ஹோ, போட்டோகிராஃபி, சகுந்தலா தேவி, லூடோ, கதல், ஹிட், ஜவான், மிஸ்டர்ஸ், மீனாட்சி சுந்தரேஷ்வர் என பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். தமிழில் தக் லைஃப் படத்தில் ஜிக்குச்சா என்ற பாடலுக்கு நடனமாடியிருப்பார்.

மலையாளத்தில் கவனம்பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சிறப்பாக நடித்திருந்தார். இவர் நடித்த கதல், ஜவான், சாம் பகதூர் படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சுந்தர் பூனம் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் ராவுடன் நடித்துள்ள ’டோஸ்டர்’ என்ற படம் நெட்பிளிக்ஸில் நேற்று (ஏப்.15) வெளியானது.

இந்த நிலையில், திரைத்துறையில் பத்தாண்டுகளை நிறைவு செய்தது குறித்து சான்யா மல்ஹோத்ரா பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பத்து ஆண்டுகள். நம்பவே முடியவில்லை. அற்புதமாக இருக்கிறது. எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Summary

Grateful for the opportunities: Sanya Malhotra on completing a decade in Bollywood

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.