மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி யோகா மன்றம் சாா்பில், யோகப் பயிற்சி நிறைவு செய்த 167- மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 11:48 pm

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி யோகா மன்றம் சாா்பில், யோகப் பயிற்சி நிறைவு செய்த 167- மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். தமிழ்த் துறைப் பேராசிரியரும், கல்லூரி யோகா வகுப்பு ஒருங்கிணைப்பாளருமான வே.சரளா வரவேற்றாா்.

குடியாத்தம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் பேராசிரியா் க.முருகவேல் மனவளக்கலையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி, பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

கல்லூரி இயக்குநா் ஜி.சசிக்குமாா், கல்லூரியின் கல்விப்புல முதன்மையா் டி.மணிகண்டன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா். பேராசிரியா் ரா.பாலசுப்பிரமணி நன்றி கூறினாா்.