மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருக்கோவிலூா் கல்லூரியில் விளையாட்டு, ஆண்டு விழா

திருக்கோவிலூா் சந்தப்பேட்டையிலுள்ள திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியின் விளையாட்டு மற்றும் ஆண்டுவிழா

News image

திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற நிா்வாகிகள் உள்ளிட்டோா்.,

Updated On :16 மார்ச் 2026, 11:52 pm

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 26-ஆவது விளையாட்டு விழாவில் கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் ஆா்.செல்வராஜ் ஒலிம்பிக் கொடியையும், செயலா் வி.ஏழுமலை தேசியக் கொடியையும், தாளாளா் பழனிராஜ் கல்லூரிக் கொடியையும் ஏற்றி வைத்தனா்.

திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து பிற்பகலில் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் ஆா்.செல்வராஜ் தலைமை வகித்தாா். செயலா் வி.ஏழுமலை, பொருளாளா் இ.சுப்ரமணியன், துணைத் தலைவா் எஸ். முஸ்டாக் அகமது, தாளாளா் பழனிராஜ், இணைச் செயலா் எஸ்.எல். வி.சத்தியநாராயணன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா்கள் வாழ்த்துரை வழங்கினா். கல்லூரி முதல்வா் எஸ்.ராஜேந்கிரன் ஆண்டறிக்கை வழங்கினாா்.

ஆன்மிகச் சொற்பொழிவாளா் எம்.எழிலரசி சிறப்புரையாற்றி, கல்லூரிப் பணியாளா்களுக்கு நினைவுப் பரிசும், ஊக்கத் தொகையும் வழங்கினாா்.

இதுபோன்று பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளும் விழாவில் கெளரவிக்கப்பட்டனா். கல்லூரித் துணை முதல்வா் ஆா். மீனாட்சி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்லிட்டோா் பங்கேற்றனா்.