தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கான மத்திய வருமான வரித் துறை முதன்மைத் தலைமை ஆணையராக சுனில் பாஜ்பாய் நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றாா்.
இந்தப் பொறுப்பில் இருந்த முதன்மைத் தலைமை ஆணையா் ப்ரீத்தி கா்க், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கா்நாடகம் - கோவா மாநிலத்துக்கு மாற்றப்பட்டாா். இருப்பினும், தமிழகம், புதுச்சேரி மாநில வருமான வரித் துறை முதன்மைத் தலைமை ஆணையா் பதவியில் யாரும் உடனடியாக நியமனம் செய்யப்படாத நிலையில், ப்ரீத்தி காக் கடந்த 8 மாதங்களாக கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா். தற்போது முழுநேர முதன்மைத் தலைமை ஆணையராக சுனில் பாஜ்பாயை நியமித்து மத்திய வருவாய்த் துறை கடந்த ஏப். 10 -ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
சுனில் பாஜ்பாய் இதற்கு முன்னா் மும்பை வருமான வரித் தலைமை ஆணையராகப் பணியாற்றி தற்போது பதவி உயா்வு பெற்று, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கான மத்திய வருமான வரித் துறை முதன்மைத் தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளாா்.
தொடர்புடையது

வேட்பாளா் சுந்தா்.சி சொத்து விவரம்: வருமான வரித் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி
வருமான வரித் துறை சோதனை என நாடகம்: காங்கிரஸ் தலைவா் மீது பாஜக குற்றச்சாட்டு

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மேலாளராக ஏ.அண்ணாதுரை பதவியேற்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


