மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டப்பேரவைத் தேர்தல்! டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை?

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை என்பது பற்றி..

News image

சட்டப்பேரவைத் தேர்தல் - பிரதிப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:41 am

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் எத்தனை நாள்களுக்கு மூடப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கின்றன.

இந்த நிலையில், வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறும் வகையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி இரவு வரை மூடப்பட வேண்டும்.

புதுச்சேரி எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் ஏப்ரல் 21 முதல் 23ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற வளாகங்களை, சட்டப்பேரவை தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.21 காலை 10 மணி முதல் ஏப். 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தற்காலிகமாக மூட வேண்டும். இந்த உத்தரவை மீறுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Regarding how many days Tasmac shops will be closed in view of the assembly elections..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.