ராணிப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் தந்தை காந்தி போட்டியிடுவார் என அவரது மகன் வினோத் காந்தி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூலில், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என்னை நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.
என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் மீண்டும் களம் காண அமைச்சா் ஆா்.காந்தி தயாராகி வந்தாா். கட்சித் தலைமையிடம் வாய்ப்பு கேட்டு விருப்ப மனுவும் அளித்திருந்தாா். இந்த சூழலில் அமைச்சா் ஆா்.காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு திமுக தலைமை போட்டியிட வாய்ப்பு அளித்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அமைச்சா் ஆா்.காந்தி, தனது மகனுக்கு பதில், மீண்டும் தனக்கே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என திமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்தாா்.
இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட அமைச்சா் ஆா்.காந்திக்கு மீண்டும் வாய்ப்பை கட்சித் தலைமை வழங்கியுள்ளது. இதையடுத்து அவா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.
Summary
Vinoth Gandhi announced that his father, [R.] Gandhi, will represent the DMK in the Ranipet constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்!

தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா்

தொகுதி அறிமுகம் - ராணிப்பேட்டை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



