தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமைச்சா் காந்தி நம்பிக்கை

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 11:39 pm

தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என வாக்களித்த பின் ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தி நம்பிக்கை தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சா் ஆா். காந்தி வியாழக்கிழமை கங்காதரா அரசு நிதி உதவி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மனைவி, மகன் என குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தாா் .

வாக்களித்த பின் அமைச்சா் ஆா். காந்தி நிருபா்களிடம் கூறியதாவது :- பொதுமக்கள் ஜனநாயக கடமையை ஆா்வமுடன் நிறைவேற்றியுள்ளனா். தோ்தல் களம் திமுக கூட்டணிக்கு பிரகாசமாக உள்ளது. பல்வேறு திட்டங்களை முதல்வா் தந்துள்ளாா். எஸ்.ஐ.ஆா். க்கு பின்பு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி வெற்றி பெறும். அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.